முக்கியஅறிவிப்பு
அல்லாஹ்வின் கிருபையால் முபாரக் பள்ளிவாசல் விரிவாக்கத்திற்கான கட்டுமானப் பணிகள் மிக விரைவாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அன்டா் கிரவுண்ட் சாமான்கள் வைப்பறையாகவும் தரைத்தளம் பெண்களுக்கும் முதல் மற்றும் 2வது தளங்கள் ஆண்களு்ககும் தயாராகி வருகிறது.
₹.8000000/- (என்பது லட்சம்) திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. பணிகள் முழுமையடைவதற்கு துஆச் செய்வதுடன் தங்களுடைய பொருளாதார உதவியையும் தாராளமாகச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இவண்.
நிர்வாகம்,
மஸ்ஜிதுல் முபாரக் நிர்வாகக் கமிட்டி
சகோதரர். முஹிப்புல்லாஹ் உமரீ
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஜகாத்தும்
ஒன்றாகும். அல்லாஹ் கூறுகிறான்.
இன்னும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்தும்; ஜகாத் கொடுத்தும் வாருங்கள்; ஏனெனில் உங்களுக்காக எந்த நன்மையை முன்னமேயே
அனுப்பி வைக்கின்றீர்களோ, அதை அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்வீர்கள்.
நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் உற்று நோக்கியவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 2:110)
மற்றொரு இடத்தில் கூறியுள்ளான்.
யார் ஈமான் கொண்டு, நற் கருமங்களைச் செய்து, தொழுகையை நியமமாகக் கடைப் பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ, நிச்சயமாக அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில்
நற்கூலி இருக்கிறது. அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 2:277)
ஜகாத்
தூய்மைப்படுத்தும்:
அல்லாஹ் கூறுகிறான். .
(நபியே!) அவர்களுடைய
செல்வத்திலிருந்து தர்மத்திற்கானதை எடுத்துக் கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும்
தூய்மையாக்குவீராக, (அல்குர்ஆன் 9:103)
ஜகாத்
கொடுப்பதால் செல்வம் குறையாது:
அல்லாஹ் கூறுகிறான்.
மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்)
பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை; ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி
ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு
கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள்.
(அல்குர்ஆன் 30:39)
ஜகாத்
எப்போது கடமையாகும்:
87 கிராம் தங்கம் அல்லது அதன் மதிப்புக்குரிய பணம், வெள்ளி மற்றும் வர்த்தகப் பொருட்கள்
வைத்திருப்போர் அதில் கட்டாயமாக இரண்டரை சதவிகிதம் வழங்குவது ஜகாத் எனப்படும்.
அதுபோல் விளை பொருட்களில் தோராயமாக 750 கிலோ எடை கொண்ட விளைபொருட்களை நீர் பாய்ச்சி, விளைபவற்றில் ஐந்து சதவிகிதத்தை அறுவடை
தினத்தில் வழங்கி விட வேண்டும். நீர் பாய்ச்சாமல் மானாவரியாக விளைபவற்றில் பத்து
சதவிகிதம் அறுவடை தினத்தில் வழங்கி விட வேண்டும. அழுகும் பொருட்கள் மட்டும்
விதிவிலக்குப் பெறும்.
நாற்பது ஆடுகள், முப்பது மாடுகள் , ஐந்து ஓட்டகங்களுக்கு மேல் வைத்திருப்போர்
அதற்கென நிர்ணயிக்கப்பட்டதைக் கொடுக்க வேண்டும். (உதாரணமாக நாற்பது ஆடுகளுக்கு ஒரு
ஆடு)
ஜகாத் கொடுக்காமல் இருப்பவருக்கு தண்டனை:
அல்லாஹ் கூறியுள்ளான். இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை
அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ (நபியே!) அவர்களுக்கு நோவினை
செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக!.(நபியே! அவர்களுக்கு நீர் அந்த
நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக
நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும்
விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் - (இன்னும்) ''இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து
வைத்தது - ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்'' (என்று கூறப்படும்). (அல்குர்ஆன் 9:34,35)
மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
கூறியுள்ளார்கள். அல்லாஹ் யாருக்கேனும் செல்வதைக் கொடுத்து அவன் அதற்கான ஜகாத்தை
நிறைவேற்றவில்லையாயின் கியாமத் நாளில் அச்செல்வம் கடுமையான நஞ்சுடைய பாம்பாக
மாறும். அது அவனுடைய கழுத்தில் சுற்றிக் கொண்டு தன்னுடைய இரண்டு விஷப் பற்களால்
அவனுடைய தாடையைக் கொத்திக் கொண்டே, 'நானே உன்னுடைய செல்வம், நானே உன்னுடைய செல்வம், நானே உன்னுடைய புதையல்'' என்று கூறும். நபி(ஸல்) இதைக் கூறிவிட்டு, அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக்
கொடுத்திருக்கும் பொருட்களில் உலோபித்தனம் செய்கிறவர்கள் அது தமக்கு நல்லதென
எண்ணவே வேண்டாம். அவ்வாறன்று! அது அவர்களுக்குத் தீங்குதான்; அவர்கள் உலோபித்தனத்தால் சேர்த்துவைத்த
(பொருள்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும். என்ற
(அல்குர்ஆன் 3:180)
ஆயத்தை ஓதினார்கள்.
(அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி 1403)
ஜகாத் செலவிடப்படும் வகை : (ஜகாத் என்னும்)
தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள்
ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ்
விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன். (அல்குர்ஆன் 9:60)
ஜகாத் என்பது கட்டாயக் கடமையான தர்மம். இது
தவிர உபரியாக நாமாக செலவிடும் தர்மம் ஸதகா எனப்படும். அதையும் அல்குர்ஆன் பல
இடங்களில் ஆர்வமூட்டுகிறது.
அல்லாஹ்வின் கிருபையால், கடந்த பல ஆண்டுகளாக மஸ்ஜிதுல் முபாரக் மூலமாக
கூட்டாக நமது கொள்கை சகோதரர்களிடமிருந்து ஜகாத்தை வசூலித்து ஏழைகளுக்கு
விநியோகித்து வருகிறோம். எனவே, இத்தகைய பணிக்கு உங்கள் ஜகாத் நிதிகளை அள்ளித்
தருமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment